USA பெரும் அதிர்ச்சி : ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகிறது.

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாக தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அமெரிக்காவில் கொரோனாவால் 1.65 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் எண்ணிக்கை 1.30 கோடியை நெருங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்