
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரதிற்குள் 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 65 இலட்சத்து 49 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 82 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.