T-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-10 போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

கேப் டவுண் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும் தென்னாபிரிக்க அணிக்கு குயிண்டன் டி கொக்கும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இறுதி ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தென்னாபிரிக்க அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பிலும், தென்னாபிரிக்கா அணி ஆறுதல் வெற்றியை நோக்கியும் களமிறங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்