PSL பாகிஸ்தான் சுப்பர் லீக்: மகுடம் சூடப் போவது யார்?

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியும் லாகூர் குலெண்டர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இமாட் வசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியில், சாட்விக் வோல்டன், பாபர் அசாம், அலெக் ஹேல்ஸ், இப்தீகார் அஹமட், ஷெர்பேன் ருத்தர்போர்ட், மொஹமட் ஆமிர், மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் குலெண்டர்ஸ் அணியில், பென் டங், பகர் சமான், டமீம் இக்பால், மொஹமட் ஹபீஸ், டேவிட் வெயிஸ், ஷாயீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆகவே இம்முறை புதியதொரு அணி சம்பியன் கிண்ணத்தை வெல்ல காத்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்