IPL 8 அணிகளில் விளையாடிய ஒரே வீரர் 

ஐ.பி.எல் போட்டிகளில் ஒரே அணிக்காக ஆரம்பத்தில் இருந்து விளையாடுபவர்கள் எப்படி மிகச்சொற்பமோ அதே போல் 8 அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்களும் மிக அரிது.

அந்த வகையில் நேற்றைய தினம் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியதன் மூலமாக ஐ.பி.எல் தொடரில் 8 அணிகளுக்காக விளையாடிய முதல் வீரர் எனும் பெருமையை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரன் பின்ச் பெற்றார்.

2010ம் ஆண்டு முதல் முதலாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய பின்ச் இப்போது தொடரில் இல்லாத டெல்லி டெயார்டெவில்ஸ், பூனே வாரியர்ஸ் இந்தியா, குஜராத் லயன்ஸ் உட்பட 8 அணிகளுக்கு விளையாடியுள்ளார்.

பின்ச் விளையாடிய 8 அணிகளின் விபரம் பின்வருமாறு

1. 2010- Rajasthan Royals  
2. 2011  2012 – Delhi Daredevils 

3. 2013- Pune Warriors India

4. 2014- Sunrisers Hyderabad

5. 2015- Mumbai Indians

6. 2016  2017- Gujarat Lions

7. 2018- Kings XI Punjab

8. 2020- Royal Challengers Bangalore 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்