IPL ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 40ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சஞ்சு சம்சன் 82 ஓட்டங்களையும் ஜெய்ஸ்வால் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், கவுல் 2 விக்கெட்டுகளையும் சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 60 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான், மஹிபல் லோரர் மற்றும் சேட்டன் சக்கரியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 42 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜேஸன் ரோய் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்