
2021 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு கல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி கெப்பிடல் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
டெல்லி அணி சார்பில் சிகர் தவான் அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், சிரேயாஸ் ஐயர் ஆட்டமிக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுக்களையும், லோகி பேர்கஷன் ஒரு விக்கெட்டையும் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
கல்கத்தா அணி சார்பில் வெங்கடேஸ் ஐயர் அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதேபோல், சுப்மென் கில் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ககிசோ ரபாடா, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் Anrich NORTJE ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.