IPL அதிக விக்கெட்டுகள் – கடும் போட்டி!

ஐபிஎல் போட்டியின் 2 ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் சோ்த்தது. ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி வீரா் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் ஆனாா்.

சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது டெல்லி.

இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 29 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் டெல்லி வீரர் ரபாடா. 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள பும்ரா 2 ஆம் இடத்தில் உள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க ரபாடா – பும்ரா இடையே கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்