
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின்
அதிகாரிகள் இடையில் நேற்று(01) பிற்பகல் Online ஊடான கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
நாளைய தினம்(03) நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு முன்னோடியாக இந்த
கலந்துரையாடல் நடைபெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
சியாம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
IMF அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இடையில் நாளை(03)
ஆரம்பிக்கப்படவுள்ள கலந்துரையாடலில் இலங்கைக்கான கடனை பெற்றுக்கொடுப்பது
தொடர்பான இணக்கப்பாடு எட்டப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது
சுட்டிக்காட்டியுள்ளார்
ReplyForward |