
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.