ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 27, 2021 முதல் செப்டம்பர் 02, 2021 வரை பலன்கள் எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் ராகு, நான்காம் வீட்டில் சூரியன், செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், புதன், ஏழாம் வீட்டில் கேது. ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்க ராசிநாதன் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுவதால் பெண்கள் தங்க நகைகள் வாங்கலாம். பழைய வண்டியை கொடுத்து விட்டு புதிய வண்டியை வாங்கலாம். குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
பதவி மாற்றம், வேலை மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகத்தை புதன் தரப்போகிறார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். பாதுகாப்பற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.