99 வயதான பெண்ணொருவருக்கு 100 பூட்டப்பிள்ளைகள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரின் 100 ஆவது பூட்டப்பிள்ளை பிறந்துள்ளது.

மார்கரிட் கொல்லேர் எனும் இப்பெண்ணுக்கு 99 வயதாகிவிட்டது. சில மாதங்களில் தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டடாவுள்ளார். அதற்கு முன்னதாகவே அவருக்கு 100 ஆவது பூட்டப்பிள்ளை பிறந்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் காலஞ்சென்ற கணவரின் நினைவாக  வில்லியம் கொல்லேர் என அப்பூட்டப்பிள்ளைக்கு மார்கரிட் பெயரிட்டுள்ளார்.

பென்சில்வேனியா மாநிலத்தில்  இப்‍பெண் வசித்து வருகிறார்.

1940களில் திருமணம் செய்த மார்கரிட் கொல்லேருக்கு 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாவது குழந்தை பிறந்தது. தான் பெரியதொரு குடும்பத்தை உருவாக்க விரும்புவதை அப்போது தான் அறிந்திருந்தாக மார்கரிட் கூறுகிறார்.

மார்கரிட்- , வில்லியம்  கொல்லேர் தம்பதியினருக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர்.  20 வருட காலத்தில் இவர்கள் பிறந்தனர். இப்பிள்ளைகள் மூலம் 56 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.

இப்போது 100 ஆவது பூட்டப்பிள்ளையும் பிறந்துள்ளது.

தான் மிகவும் அதிஷ்டசாலி எனக் கருதுவதாக மார்கரிட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் எந்தவொரு முக்கிய நிகழ்விலும் மார்கரிட் தவறால் கலந்துகொள்வார் என அவரின் பேத்திகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்