
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கடந்த முறை க.பொ.த சாதாரன தரப்
பரீட்சைக்கு தோற்றி 9 ஏ பெறுபேறுகளை பெற்ற மாணவர்களில் தெரிவு
செய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு சங்கத்தானை சாரதா சனசமூக நிலையத்தினர்
தலா 50 ஆயிரம் ரூபாவினை ஊக்குவிப்புத் தொகையைாக வழங்கியுள்ளனர்.
சாவகச்சேரி சங்கத்தனை சனசமூக நிலையம் மற்றும் இளங்கோ பாலர் பாடசாலையின்
பொங்கல் விழா நிகழ்வு நேற்று முன்தினம் ( 15 ) சனசமூக நிலைய மண்டபத்தில்
இடம்பெற்றது. இதன்போதே குறித்த மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா
வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகம் கையளிக்கப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட
மாணவச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் என் சர்வேஸ்வரன்,
ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன், வேல்ட் விசன் நிறுவனத்தின் நுவரெலிய
மாவட்ட இணைப்பாளர் அழகுராஜா மற்றும் சனசமூக நிலையத்தின் தலைவர் செயலாளர்,
நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.