
நாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவ கூடும் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
இதேநேரம், சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகளின் துணை அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத், பண்டிகை காலங்களில் பயணத்தைக் கட்டுப்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.