8 ஆடம்பர மாளிகைகளை நிர்மாணிக்கும் அதிரடி நடவடிக்கையில் வட கொரியத் தலைவர்

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கிலுள்ள தனது சங்கவங்ஸன் வளாகத்தில் 8 ஆடம்பர மாளிகைகளை நிர்மாணிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம்  தன்னை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் எதிரிகளை தான் எங்கு படுத்து உறங்குகிறார் என்பதை அறிய முடியாது திண்டாடச் செய்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர் மேற்படி மாளிகைகளை  நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாளிகைகளை நிர்மாணிக்கும் திட்டமானது வட கொரிய தலைமைத்துவம் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிம் ஜொங் உன் ஏற்கனவே  மேற்படி தேவைப்பாட்டைக் கருத்திற் கொண்டு நாடெங்கும் 13  வசிப்பிடங்களை நிர்மாணித்துள்ளதாக அந்த அமைப்பின் ஆய்வு கூறுகிறது. 

கிறிஸ்துவுக்கு முன் 221 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 26 வருடங்கள் சீனாவை ஆட்சி செய்த அந்நாட்டின் முதலாவது பேரரசர் கின் ஷி ஹுவாங் இலக்குவைக்கப்பட்ட தாக்குதல்களிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு இரவையும் வெவ்வேறு மாளிகைகளில் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்ற நிலையில் கிம் ஜொங் உன்னின் நடவடிக்கை அதனை நினைவுகூருவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்