71ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது இந்தியா – டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

இன்று (ஜனவரி 26) இந்தியா முழுவதும் 71வது குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, தலைநகர் புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

71வது குடியரசு தினம் கொண்டாட்டம் –

71வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டில் பல்வேறு சாகசம் மற்றும் எண்ணற்ற தியாகம் செய்யும் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரேசில் அதிபர்

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ பங்கேற்கிறார்.

ந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரேசில் அதிபர்

இந்நிலையில், டெல்லியில் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

இந்நிலையில், காலை சுமார் 9:30 மணி அளவில் காலை இந்தியா கேட் அருகில் உள்ள போர் நினைவிடத்திற்கு வருகை தந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. உடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இருந்தார். 

போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய பிரதமர் மோதி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் குடியரசு தின விழா

சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறைக்கான பல்வேறு விருதுகளையும் வழங்கினார்.

17,000 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

லடாக்கில் 17,000 அடி உயரத்தில் இந்திய திபெட்டிய எல்லை பாதுகாப்புப் படையினர் தேசியக் கொடியை ஏந்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர். அங்கு தற்போது -20 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது

முகநூலில் நாம்