7 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணிக்கு தொடர் வெற்றி

நெதர்லாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை ஒரு போட்டி மிச்சம் வைத்து 2–0 என கைப்பற்றியுள்ளது.

நெதர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாக். அணி கடந்த வியாழக்கிழமை ரொட்டர்டாமில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 44.1 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சுருண்டது. பேஸ் டி லீட் மற்றும் டொம் கூப்பர் 4ஆவது விக்கெட்டுக்காக பெற்ற 109 ஓட்ட இணைப்பாட்டமே நெதர்லாந்தின் ஓட்டங்கள் அதிகரிக்க உதவியது. லீட் 89 ஓட்டங்களையும் கூப்பர் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய பாக். அணி 33.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. அதிகபட்சமாக முஹமது ரிஸ்வான் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்