61 வயதில் 28 வயது பெண்ணை மணம் முடித்த முதியவர்

61 வயதான முதியவருக்கும் 28 வயதான இளம் பெண்ணுக்கும் திருமணம் இடம்பெற்றுள்ள சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சரி சம்பவத்துக்குப் போவோம்…

 பிரான்ஸில் வசித்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த 61 வயதானவர்,   தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 28 வயதான இளம் பெண்ணை அனுகி, இது தொடர்பாக எடுத்துக்கூறி முதியவரை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

முதியவரை திருமணம் செய்ய அந்த பெண்ணும் சம்மதித்து பிரான்ஸ் நாட்டுக்குக் செல்லவும் சம்மதித்தாக கூறப்படுகிறது.

  அந்த பெண், முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆகலாம் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று பலரும் தெரிவித்து கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2.5 கோடி ரூபாய் முதியவர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்