“600 “கந்தகாடு கைதிகள் தப்பியோட்டம்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று (29) காலை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு செல்வது கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துங்காவில பாலத்திற்கு அருகில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ராணுவம் மற்றும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்