6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்!

இலங்கையின் புதிய வீதி வரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக நில அளவீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. 6 வருடங்களின் பின்னர் புதிய வீதி வரைபடத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நில அளவீட்டு திணைக்கள அளவீட்டாளர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் தகவல் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகள் தொடர்பான தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள் தொடர்பிலான தகவல்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய விசேடமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வரைபடம் பயனுள்ளதாக அமையயும் என திணைக்கள அளவீட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்