6 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ள சீன திரையரங்குகள்..!

சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் இன்று (20) முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக சீனா திரைப்பட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்து முகமூடி அணிதல், உடல் வெப்பநிலை அளவீடு உள்ளிட்ட நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் 30 சதவீதத்துக்கும் குறைவான பார்வையாளர்கள் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்