
சட்டமா அதிபர் திணைக்களத்தில் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 7 குற்றச்சாட்டுக்களில் ஆறு குற்றச்சாட்டுக்களில் தன்னை நீதிமன்றம் விடுவித்துள்ளதாக சபையில் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஒரே ஒரு குற்றச்சாட்டில் மாத்திரமே தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாறாக பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததாக எனக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றார்.
எனக்கு எதிராக சட்டமா அதிபரால் ஏழு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஏழு குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் என்ன விடுவித்துள்ளது. ஒரே ஒரு குற்றச்சாட்டுக்கு மட்டுமே எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை உள்ளது. இதனை தெரிந்துகொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.