54 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தபால் மூலமான வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புள்ளடியிடப்படுகின்ற தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்டு, தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 54 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்