52 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள்!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 52 லட்சத்து 14 ஆயிரத்து 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 27 லட்சத்து 84 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 598 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரசில் இருந்து 20 லட்சத்து 94 ஆயிரத்து 143 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா – 16,21,333
ரஷியா – 3,26,448
பிரேசில் – 3,10,921
ஸ்பெயின் – 2,80,117
இங்கிலாந்து – 2,50,908
இத்தாலி – 2,28,006
பிரான்ஸ் – 1,81,826
ஜெர்மனி – 1,79,110
துருக்கி – 1,53,548
ஈரான் – 1,29,341
இந்தியா – 1,18,447
பெரு – 1,08,769
சீனா – 82,971
கனடா – 81,324
சவுதி அரேபியா – 65,077
மெக்சிகோ – 59,567
சிலி – 57,581
பெல்ஜியம் – 56,511
பாகிஸ்தான் – 50,694

முகநூலில் நாம்