50 ரூபாய்க்கு நெல் கொள்வனவு!

2020ஆம் ஆண்டுக்கான அரசின் நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின்கீழ், ஒரு கிலோகிராம் நெல் 50 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் நாடு நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாய்க்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 41 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2019/2020 பருவகாலத்தில் நெல்லுக்கு அதிகூடிய கொள்வனவு விலையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இம்முறை அதிகபட்ட விலையினை பெற்றுக்கொடுக்கும் வகையில் 50 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.

முகநூலில் நாம்