5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி! நன்றி கூறிய மோடி

சார்க் நாடுகளில் கொரோனா வைரஸை தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கடந்த 15 ஆம் திகதி வீடியோ மாநாடொன்று நடைபெற்றது.

அதன்போது பிராந்தியம் என்ற வகையில் இச்சவாலுக்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்கும் தலைவர்களுக்கிடையில் இணக்கம் காணப்பட்டது.

அதன்படி குறித்த நிதியத்திற்காக இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி நேற்று அறிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருக்கிறார்:

‘சார்க் நாடுகளின் கொவிட் – 19 ஐ எதிர்கொள்வதற்கான அவசர நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மோசமான வைரஸ் தொற்றை எதிர்கொண்டு இல்லாதொழிப்பதில் எமக்கு இடையிலான ஒத்துழைப்பு வலுவாகத் தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்