47 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ஜப்பான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்ற 47 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரிலிருந்து 41 இலங்கையர்களும், ஜப்பானிலிருந்து அதிகாலை 3.15 மணியளில் 6 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்