46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு பிரித்தானியாவில்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 46ஆயிரத்து 229பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 24ஆயிரத்து 405பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 274பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 89ஆயிரத்து 745பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 975பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்