
பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 45 000 இற்கும்அதிகமான போதைப்பொருட்கள் தொடர்பான சுற்றிவளைப்புக்களில் , 90 744சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,இவ்வாண்டில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 1441 கிலோ கிராம் ஹெரோயின்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 948 சுற்றிவளைப்புக்கள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய 45 801 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அதே போன்று 11 881 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 34 182 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய 34062 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 109 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 10 576 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 10 532சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களால் ஒருவகை மருந்துஉபயோகிக்கப்படுகிறது. அவ்வாறான ஒரு இலட்சத்து 1353 மாத்திரைகள்கைப்பற்றப்பட்டுள்ளன.அதே போன்று ஒரு இலட்சத்து 11 540 போதை மாத்திரைகளும் மீட்க்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் 349 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான சுற்றி வளைப்புக்கள்தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இதற்காக மக்களின் ஒத்துழைப்புக்களும் தொடர்ந்தும் எமக்கு கிடைக்கப் பெறுகின்றன. அதனை தொடர்ந்தும்எதிர்பார்க்கின்றோம் என்றார்.