4 பக்க கடிதத்துடன் தூக்குப் போட்டுக் கொண்ட நடிகை ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கடிதம்.

சமீப காலமாக சினிமா துறையில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் சிலபல காரணத்தின் மூலமாக தனது உயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்போது கன்னட சின்னதிரை நடிகை சௌஜன்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை கன்னட திரைஉலகில் சீரியல்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பெங்களூருக்கு அருகில் உள்ள கும்பல்கோடு என்ற பகுதியில் வசித்து வந்து கொண்டிருந்தாள்.

இன்று அதிகாலையில் மின்விசிறியில் தூக்கு போட்டுகொண்டது அனைவருக்கும் தெரிந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் உடனே அங்கு சென்று கதவை உடைத்து அவருடைய உடலை மீட்டு உள்ளார்கள். பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து அதுமட்டுமல்லாமல் விசாரணையும் நடத்த வருகிறார்கள்.

இந்நிலையில் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது நான்கு பக்கம் உள்ள ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் அந்த வகையில் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளது என்னவென்றால் நான் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு உள்ளேன் இதன் காரணமாகத்தான் நான் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளேன் இதற்கு வேறு யாரும் காரணம் கிடையாது என்று கூறியுள்ளார்.

மேலும் என்னை மன்னித்துவிடுங்கள் என்னுடைய பெற்றோருக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தை பார்த்தாள் இரு நாட்களுக்கு முன்பாக எழுதப்பட்ட கடிதமாக  தெரிகிறது இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பாக நடந்த சம்பவங்களையும் அவருடைய நண்பர்களையும் தீர விசாரித்து வருகிறார்கள் அதிகாரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்