4 தமிழ் இணையத் தொடர்கள் பிரபலங்கலினால்  உருவாக்கப்படவுள்ளது

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரபலங்கள் பங்களிப்பில் உருவாகவுள்ள நான்கு தமிழ் இணையத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சத்யராஜ், காஜல் அகர்வால், தமன்னா, ஜெய், ஆர்ஜே பாலாஜி, வாணி போஜன், சீதா போன்றோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

தீபாவளியன்று நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதன்பிறகு நான்கு தமிழ் இணையத் தொடர்களும் வெளியாகவுள்ளன.

லைவ் டெலிகாஸ்ட் என்கிற தொடரை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி போன்றோர் நடித்துள்ளார்கள்.

மை பெர்பெக் ஹஸ்பெண் என்கிற தொடரில் சத்யராஜ், சீதா, சூப்பர் ஆஜீத் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் டிரிபிள்ஸ் என்கிற நகைச்சுவை தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெய், விவேக் பிரசன்னா, வாணி போஜன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

நவம்பர் ஸ்டோரி என்கிற தொடரில் தமன்னா, பசுபதி போன்றோர் நடித்துள்ளார்கள். இந்திரா சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்