
பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவா்கள் 31 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனா்.
இதுகுறித்து பாகிஸ்தான் கடல்சாா் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடந்த பிப். 18 ஆம் திகதி ரோந்து சென்றபோது ஊடுருவிய 5 இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த 31 மீனவா்களும் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் படகுகள் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் எல்லையை மீறி மீன்பிடித்ததாக இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பிலும் மீனவா்கள் கைது செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.