304 பேர் நாடு திரும்பினர்!

இலங்கைக்கு வருகைதர முடியாமல் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தங்கியிருந்த 304 பேர், இன்று (30) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானங்கள் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து வருகைதந்த விமானத்தில் 18 பேரும், அவுஸ்திரேலியா- மெல்பன் நகரிலிருந்து வருகைதந்த விமானத்தில் 286 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்