
வியட்நாம் கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடன் தத்தளித்துக்கொண்டிந்தகப்பலின் தலைமை மாலுமி கப்பல் மூழ்கத்தொடங்குவதற்கு சற்று முன்னர்கப்பலில் இருந்து வெளியேறி தப்பிதலைமறைவாகியுள்ளார் என வியட்நாம் ஊடகம்செய்தி வெளியிட்டுள்ளது.கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜப்பானின் கார் கப்பலான ஹெலியோஸ்லீடர்காப்பாற்றி அவர்களை வியட்நாமின் வுங் டாவுவிற்கு கொண்டு சென்றது.நவம்பர் ஆறாம் திகதி 303 இலங்கையர்கள் ஹெலியோஸ் லீடர் கப்பலால்காப்பாற்றப்பட்டனர் அவர்களின் கப்பல் 40 மணித்தியாலம் நகரமுடியாமல்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது என வியட்நாமின் செய்தித்தாள் செய்திவெளியிட்டுள்ளது.கப்பல் நகரமுடியாமல் திணறிய வேளை கப்பலின் தலைமை மாலுமி கப்பலில் இருந்துவெளியேறினார் அவர் திரும்பிவரவில்லை என வியட்நாம் செய்தித்தாள்தெரிவித்துள்ளது.கப்பலின் தலைமை மாலுமி எப்படி வெளியேறினார் என்பதுதெரியவில்லை,வேண்டுமென்றே வெளியேறினாரா என்பது தெரியவில்லை கப்பலில்இருந்தவர்களின் இலக்காக கனடா காணப்பட்டது எனவும் வியட்நாம்செய்தித்தாள் தெரிவித்துள்ளது.