300 ஓட்டங்களைக் குவித்த இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI), முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பல்லேகலவில் இன்று இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இலங்கை சார்பாக பந்துவீச்சாளர் டுனித் வெல்லலாகே அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனுஷ்க குணதிலகவின் 55 (53), பதும் நிஸங்கவின் 56 (68) ஓட்டங்களோடு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் குணதிலகவின் ரண் அவுட்டைத் தொடர்ந்து நிஸங்கவும் அஸ்தன் அகரிடம் வீழ்ந்ததோடு, தனஞ்சய டி சில்வாவும் சிறிது நேரத்தில் அகரிடம் வீழ்ந்தார்.

தொடர்ந்து குசல் மென்டிஸும், சரித் அஸலங்கவும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 37 ஓட்டங்களுடன் ஜஹை றிச்சர்ட்ஸனிடம் அஸலங்க வீழ்ந்தார். அடுத்து வந்த ஷானக, சாமிக கருணாரத்ன ஆகியோர் உடனேயே மர்னுஸ் லபுஷைனிடம் வீழ்ந்தனர்.

இந்நிலையில், மென்டிஸின் ஆட்டமிழக்காத 86 (87), வனிடு ஹஸரங்கவின் அதிரடியான 37 (19) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்