30 படகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன!

இலங்கைக்கு சொந்தமான 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஏப்ரல் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குடாவெல்ல மற்றும் திருகோணமலையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளே சூறாவளி காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொலைபேசியூடாக மீனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை.

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற படகுகளில் 150துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்