30 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த மண்ணில் 30 ஆண்டுகளின் பின்னர் இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் இலங்கை வென்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 2-1 என முன்னிலை வகித்த இலங்கை, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியிலும் வென்று, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியே மேற்கூறப்பட்டதை இலங்கை நிகழ்த்தியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

இலங்கை: 258/10 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அஸலங்க 110 (106), தனஞ்சய டி சில்வா 60 (61), வனிடு ஹஸரங்க ஆ.இ 21 (20), டுனித் வெல்லலாகே 19 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 2/37 [9], மிற்செல் மார்ஷ் 2/29 [7], மத்தியூ கூனமென் 2/56 [8], கிளென் மக்ஸ்வெல் 1/49 [8])

அவுஸ்திரேலியா: 254/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 99 (112), பற் கமின்ஸ் 35 (43), ட்ரெவிஸ் ஹெட் 27 (33), மிற்செல் மார்ஷ் 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமிக கருணாரத்ன 2/19 [5], தனஞ்சய டி சில்வா 2/39 [10], ஜெஃப்ரி வன்டர்சே 2/40 [7], மகேஷ் தீக்‌ஷன 1/40 [10], வனிடு ஹஸரங்க 1/52 [10], டுனித் வெல்லலாகே 1/29 [5])

போட்டியின் நாயகன்: சரித் அஸலங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்