3.5 மில்லியன் பாடசாலை மாணவர்களிற்கு உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் அவசியம் – ஜோசப் ஸ்டாலின்

3.5 மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்றி பாடசாலை செல்கின்றனர் என
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொள்ளும்போது 4.5
மில்லியன் பாடசாலை மாணவர்களில்  3.5 மில்லியன் மாணவர்களிற்கு
உணவுவழங்கவேண்டிய நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர்
மாணவர்களிற்கு உணவை வழங்குவதற்கான திட்டத்தை  கல்வி அமைச்சு உட்பட
அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் உணவு தேவை தொடர்பான விடயத்தில் தற்போதுமிக மோசமான
நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின்  பல பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளிற்கு உணவு வழங்குவதற்கான வசதியில்லாத நிலையில் உள்ளனர்
எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்