3 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட பிரித்தானியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இங்கிலாந்தில் இன்று முதல் பல கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டுள்ள போதிலும் சில கட்டுப்பாடுகள் இன்னமும் அமுலில் இருப்பதோடு கட்டுப்பாடுகளூம் விதிக்கப்பட்டுள்ளன.

மூன்று மாதங்களுக்கு பின்னர் உணவகங்கள் மற்றும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சூழலில் எவற்றுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எவற்றுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, எவ்வாறு செயற்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டு அறிவிப்புக்களும் வெளியாகியுள்ளது.

அதற்கமைய….

நீங்கள் செய்யக் கூடியது என்ன

சமூக இடைவெளிகளை பேணி வீடுகளுக்குள் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் சந்திப்புகளை மேற்கொள்ளலாம். குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைதல் மற்றும் இரவு நேர விருந்துகளுக்காக வீடுகளுக்குள் கூட அனுமதி வழங்கப்படுகிறது.

இரண்டு மீற்றர் சமூக தூர இடைவெளி ஒரு மீற்றராக குறைக்கப்படுகிறது.

மதுபான நிலையங்கள் மற்றும் உணவகங்களை திறக்க முடியும். எனினும் வாடிக்கையாளர்களை நெருங்க வேண்டுமாயின் அரசாங்கத்தின் பரிசோதனை மற்றும் கண்டுபிடிக்கும் திட்டங்களுக்காக அவர்களின் பெயர்கள், தொடர்புகொள்ள வேண்டிய விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தொடக் கூடிய சந்தர்ப்பங்களை குறைக்குமாறு மதுபான நிலையங்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது. மது அருந்துபவர்கள், மதுபான நிலையத்தில் இருப்பவைக்கு பதிலாக தமது மேசைகளில் இருக்கும் அட்டவணைகளில் இருந்து மதுபானம் கோர வேண்டும்.

சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் சிகை திருத்தும் நபர்கள் மீண்டும் தமது வர்த்தக நிலையங்களை திறக்க முடியும். ஆனால், வாடிக்கையாளர்களின் வரிசை வெளியில் இருக்க வேண்டும். நிலையத்திற்குள் அமர இடமளிக்க முடியாது.

பிங்கோ மண்டபங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

ஹோட்டல்களில் இரவில் தங்க அனுமதி வழங்கப்படுவது, படுக்கை , காலை உணவு மற்றும் முகாமிடவும் அனுமதி வழங்கப்படுகிறது.

திருமணம், பிறந்ததினம், மேலும் இதர நிகழ்வுகளுக்கு 30 நபர்களுக்கும் மேல் அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் வைபவத்தில் திருமண தம்பதிகள் இணைந்து உணவு உட்கொள்ளவோ, பானங்களை அருந்தவோ, பாடல்களை பாடவோ, ஒருவரையொருவர் ஆரத் தழுவுதல், நடனமாடுதல் கூடாது என ஆலோசனை வழங்கப்படுகிறது.

வணக்கஸ்தலங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. வெளியரங்க உடல் பயிற்சி நிலையங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களையும் பயன்படுத்த முடியும்.

மீண்டும் திறக்கப்படும் அனைத்து இடங்களிலும் கொரோனா பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் வெளியாருடன் காலத்தை செலவிடும் நேரத்தை குறைக்குமாறு தொடர்ந்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ள இடங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை மீள திறக்க முடியும். பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிப்போர் கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும்.

நீங்கள் செய்யக் கூடாதவை என்ன?.

மக்கள் தாம் நேசிப்பவர்களை கட்டியணைக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

திரையரங்குகள், மண்டபங்கள் இயங்க முடியும், ஆனால் நேரடி மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.

இரவு நேர களியாட்ட விடுதிகள், உள்ளரங்க உடற்பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஜூலை மாத நடுப் பகுதியில் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஓய்வு நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கலாசார செயலாளர் ஒலிவர் டோடன் தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள், பச்சை குத்தும் நிலையங்கள், நகம் வெட்டி அழகுபடுத்தும் நிலையங்கள், மென்மையான விளையாட்டு நடைபெறும் இடங்கள், நீச்சல் குளங்கள், பனிபந்து விளையாடும் இடங்கள், நீர் பூங்காக்கள் என்பன திறக்கப்பட மாட்டாது.

மேலும் 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வாரம் கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8ம் திகதி முதல் அமுலில் இருந்து வந்தது.

ஆனால் எதிர்வரும் 10ம் திகதி முதல் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவில் லெய்ஸ்டர் பகுதியில் அதிகளவிலான கொரோனா தொற்றுக்கள் திடீரென அதிகரித்தமையைத் தொடர்ந்து மேலும் இரு வாரங்களுக்கு லொக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்