3 நாட்­களில், 36,482 கிலோ­மீற்றர் தூரம் பயணம் செய்­த­தாக வாடகைக் கார் நிறு­வனம் தெரி­வித்­ததால் பெரும் அதிர்ச்­சி­

கன­டாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் 3 நாட்­களில், 36,482 கிலோ­மீற்றர் தூரம் வாடகைக் காரில் பயணம் செய்­த­தாக வாடகைக் கார் நிறு­வனம் தெரி­வித்­ததால் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்தார்.

இத்­தூரம் பூமியின்  சுற்­ற­ள­வுக்கு (40075 கி.மீ) ஏழத்­தாழ  சம­னா­னது. 3 நாட்­களில் இவ்­வ­ளவு தூரம் பயணம் செய்­வ­தென்றால் இடை­வி­டாமல் மணித்தியா­லத்­துக்கு 536.5 கிலோ­மீற்றர் தூரம் அப்பெண் பயணம் செய்­தி­ருக்க வேண்டும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜியோ­வனா பொனிபேஸ் எனும் இப்பெண், கன­டாவின் மேற்குப் பிராந்­திய நக­ரான வான்­கூ­வரைச் சேர்ந்­தவர்.

தனது மகளின் பல்­க­லைக்­க­ழக விட­ய­மாக, அவர் இம்­மாத முற்­ப­கு­தியில் வன்­கூ­வ­ரி­லி­ருந்து டொரன்டோ நக­ருக்கு விமா­னத்தில் வந்­தபின் விமான நிலை­யத்தில் வைத்து, ஆவிஸ் நிறு­வ­னத்தில் யுகோன் டெனாலி ரக வாடகைக் கார் ஒன்றைப் பெற்றார்.

டொரன்டோ நகரின் பல வீதி­களில் அக்­காரை செலுத்திச் சென்ற ஜியோ­வனா, சுமார் 100 கிலோ­மீற்றர் தூத்­தி­லுள்ள தனது மாமி­யாரின் வீட்­டுக்கும் சென்று வந்தார்.  

3 நாட்­க­ளிலும் மொத்­த­மாக சுமார் 300 கிலோ­மீற்றர் தூரம் தான் பயணம் செய்­தி­ருக்­கக்­கூடும் என ஜியோ­வனா மதிப்­பிட்­டி­ருந்தார்.

3 நாட்­களின் பின் அவ்­வா­க­னத்தை விமான நிலை­யத்தில் விட்­டு­விட்டு, ஐரோப்­பா­வுக்கு செல்­வ­தற்குத் தயா­ரானார் ஜியோ­வனா.

அப்­போது தனது வாடகைக் கார் கட்­டணம் செலுத்­தப்­பட்­டதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தனது கட­னட்டை அறிக்­கையை அவர் ஆராய்ந்தார். 

அப்­போது 8,079.76 டொலர்­களை ஆவிஸ் எனும் வாடகைக் கார் நிறு­வனம் வசூ­லித்­துள்­ளமை குறித்து ஜியோ­வனா பெரும் அதிர்ச்­சி­ய­டைந்தார். 

நிறு­வ­னத்தின் பொது அலு­வ­ல­கத்­துக்கு தான் தொலை­பேசி அழைப்பு விடுத்து இது குறித்து முறைப்­பாடு செய்­யப்­பட்ட போதிலும், அவர்கள் இப்­பி­ரச்­சி­னையை புரிந்­து­கொண்­ட­வர்­க­ளாகத் தெரி­ய­வில்லை என ஜியோ­வனா கூறு­கிறார்.

அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பற்­றுச்­சீட்­டின்­படி, கிலோ­மீற்­ற­ருக்கு 25 கனே­டிய சதம் என்ற வீதத்தில் கட்­டணம் அற­வி­டப்­பட்­டி­ருந்­தது. 36,482 கிலோ­மீற்­றர்கள் அவர் பயணம் செய்­துள்­ள­தாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  68 மணித்­தி­யா­லங்­களே அவ்­வா­க­னத்தை ஜியோ­வனே பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

மெக்­ஸி­கோவின் தலை­ந­க­ரான மெக்­ஸிகோ சிற்­றி­யி­லி­ருந்து வட அமெ­ரிக்க கண்­டத்தின் வட­ப­கு­தி­யி­லுள்ள அலாஸ்­காவின் ஸ்காக்வே நக­ருக்கு 3 நாட்கள் இடை­வி­டாமல் பய­ணித்­தி­ருந்தால் கூட சுமார் 6,800 கிலோ­மீற்றர் தூரமே பயணம் செய்­தி­ருக்க முடியும். 

ஜியோ­வனா பயணம் செய்­த­தாக ஆவிஸ் நிறு­வனம் தெரி­வித்த தூர­மா­னது வட அமெ­ரிக்க கண்டம் முழு­வ­தையும் 3 தட­வைகள் சுற்றி வரு­வ­தற்கு ஏறத்­தாழ சம­மா­னது.

மேற்­படி யுகோன் டெனாலி ரக  வாகனம் அதி­க­பட்­ச­மாக மணித்­தி­யா­லத்­துக்கு சுமார் 176 கிலோ­மீற்றர் வேகத்­தி­லேயே பய­ணிக்க முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடலில் பொருத்­த­மான பாலங்கள் அமைக்­கப்­பட்­டி­ருந்தால், கன­டாவின் டொரண்டோ நக­ரி­லி­ருந்து தென் ஆபி­ரிக்­காவின் கேப் டவுண் நக­ருக்கே சென்று திரும்­பி­யி­ருக்­கலாம் என்­கிறார் ஜியோவனே. 

இவ்விடயம் உள்ளூர் ஊடகங்களில் செய்தியாகியதையடுத்து. 9 நாட்களின் பின்னர் ஆவிஸ் நிறுவனத்திடமிருந்து ஜியோவனாவுக்கு பதில் கிடைத்தது. 

தவ­றொன்று ஏற்­பட்­டு­விட்­ட­தா­க வும், அவ­ரிடம் அறி­வி­டப்­பட்ட மேலு திக் கட்­ட­ணங்கள் மீள வழங்­கப்­படும் எனவும் அந்­நி­று­வனம் தெரி­வித்­தி­ருந்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்