29.02.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது. மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். காலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்குமேல் கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரி யாகிவிடும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். சக ஊழியர் களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுத லாகக் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

கடகராசி அன்பர்களே!

தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர் கள். அலுவலகத்தில் வழக்கமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.

சிம்மராசி அன்பர்களே!

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மற்றவர் களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

காலையில் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

துலாராசி அன்பர்களே!

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலையவேண்டி இருக்கும். அதன் காரணமாக உடல் அசதியும் மனச்சோர்வும் ஏற்படும். ஆனால், வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளை கள் நீங்கள் சொல்லும் அறிவுரையின்படி நடந்துக்கொள்வார்கள். அலுவலகத்தில் சக பணியாளர் கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

தனுசுராசி அன்பர்களே!

குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த் தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

மகரராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமானவரை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கும்பராசி அன்பர்களே!

இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை மிகவும் அவசியம். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. மற்றவர்கள் கோபத்தில் பேசினாலும், நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். கணவன் – மனைவி இருவரும் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரி களால் பிரச்னை ஏற்படக்கூடும். வீண் செலவுகளும் ஏற்படும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட் டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

முகநூலில் நாம்