276 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் இன்று (24) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் டாக்காவில் இருந்து, அதிகாலை 1.50 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து இவர்களின் உடல் வெப்பநிலையை அளவிட்டு, முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்