கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் ஓசியர் கடைச் சந்தி கடந்து இடம்பெற்ற வீதி விபத்தில் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

உந்துருளியில் பயணித்த அவர் எதிரே வந்த மகேந்திர ரக வாகனத்துடன் மோதுண்டு இறந்துள்ளார்.
தற்போது அறுவடைக் காலம் அறுவடை செய்யப்படும் நெல்லை உலர விடுவதற்கு போதுமான இடங்கள் மாவட்டத்தில் இல்லை. இதன் காரணமாக பல விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை காபெற் வீதிகளில் அதுவும் பிரதான வீதிகளின் ஒரு பக்கத்தை ஆக்கிரமித்த உலரவிடுகின்றனர்.
இவ்வாறு உலரவிடும் நெல் வீதியின் சில கிலோமீற்றர்கள் வரை காணப்படுகிறது. இதனால் வீதி போக்குவரத்து அவ்வவ் போது நெருக்கடிக்கு உள்ளாகிறது.
அப்படிதான் இன்றும் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் ஊடாக பூநகரிநோக்கி பயணித்த இவர் எதிரே வந்த மகேந்திரா வாகனமும் நேர் நேராக விபத்துக்குள்ளாகியதில் மரணம் ஏற்பட்டுள்ளது என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.