26.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக் கூடும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன் யம் அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர் செல்ல நேரிடும்போது கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதனால் பணலாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மிதுனராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாய்வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். மற்றவர்களுடன் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கடகராசி அன்பர்களே!

மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களின் சந்திப்பு சங்கடம் தருவதாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

கன்னிராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சகோதரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாய்வழி யில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். பழைய கடன்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பணியா ளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும்.

விருச்சிகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் இருந்த இழுபறி நிலை மாறும். உறவினர் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மகரராசி அன்பர்களே!

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வார்கள். குடும்பம் தொடர்பான வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப்பணிகளை முன் னின்று நடத்துவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த் திக் கடனை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண்வாக்கு வாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள் வார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால், தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன ரக ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு செலவுகளை ஏற் படுத்துவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளின் காரணமாக மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

முகநூலில் நாம்