21.01.2020 – இன்றைய ராசி பலன்

மேஷராசி அன்பர்களே!

இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

மிதுனராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடி யும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்கு தாரர்களிடம் எதிர்பார்த்த உதவி சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும்.

கடகராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலர் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. உடல் ஆரோக்கியத் தில் மட்டும் சிறிது கவனம் தேவை. அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னிராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவும் ஏற்படும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் கடனும் வாங்க நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால் உடல் நலனில் கவனம் தேவைப்படும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

முகநூலில் நாம்