21 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஹெரோயினுடன் கைது 

திருகோணமலை  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்ததாக  திருகோணமலை மாவட்ட பிராந்திய  போதை பொருள் ஒழிப்ப பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 590 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளம்பெண் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

விற்பனைக்காக வீட்டில் ஹெரோயினை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையிலே சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளம்பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் என்றும் பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

முகநூலில் நாம்