21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் துப்பாக்கி வாங்க முடியும் ஜோ பைடன் யோசனை

துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21ஆக அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல. நமது குழந்தைகளை, குடும்பத்தினரை, சமூகத்தினரை பாதுகாப்பதற்காகத்தான். பாடசாலைகளுக்கு, தேவாலயங்களுக்கு, கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகத்தான்’ என கூறினார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்