2023 வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

நிலையான மற்றும் நீண்டகால பொருளாதார அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்ட2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல்பொருளாதாரம் ஆகிய துறைகள் தொடர்பாக 2023 வரவு – செலவு திட்டத்தில் விசேடகவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சமூக சந்தை பொருளாதாரத்தின் ஊடாக வரவு – செலவு திட்ட இலக்குகளை அடையஎதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ளஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் சமூக நலன்கள் தேவைப்படும்மக்களுக்கு அதனை வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்துசக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்பும் கொள்கை பின்புலத்தைஉருவாக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.2023 வரவு – செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீனபொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டை ஆரம்பிப்பதன் மூலம்இளைஞர்களுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டம்உருவாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.அடுத்த வருடத்திற்கான அரச செலவு 7 இலட்சத்து 87 ஆயிரத்து 949 கோடியை கடந்துள்ளது.சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட நாளாந்த செயற்பாடுகளுக்கு தேவையான மீண்டெழும்செலவுக்காக 400 இலட்சத்து 63 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிக நிதிஒதுக்கப்பட்டுள்ளது.அடுத்த வருட வரவு – செலவு திட்டத்தில் பொது நிருவாகம், உள்நாட்டுஅலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சுக்கேஅதிகூடிய நிதி உத்தேசிக்கப்பட்டுள்ளது.85 ஆயிரத்து 625 கோடி ரூபா நிதி அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சுக்காக 61 ஆயிரத்து 393 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி வரவு –செலவு திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சுக்காக 41 ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வரவு – செலவு திட்டம் மீதான விவாதம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல்டிசம்பர் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.வரவு – செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம்08 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்