2022 ஆம் ஆண்டுக்கான “லங்கா ப்ரீமியர் லீக்” ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,  லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 24 போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இதில் முதல் 14 போட்டிகளை கொழுபில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்