2020 ஐ.பி.எல். போட்டியிலும் ‘மன்கட்’ ரன் அவுட் செய்வேன்- அஸ்வின் சொல்கிறார்

இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசியபோது, ராஜஸ்தான் வீரர் ஜோஸ்பட்லர் (இங்கிலாந்து) கிரீசைவிட்டு வெளியே சென்றதால், அவரை மன்கட் முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு கை கொடுக்க ஜோஸ்பட்லர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டியிலும் யாராவது கிரீசைவிட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்வேன் என்று கூறியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அஸ்வின் பதில் அளித்தார். அப்போது வருகிற ஐ.பி.எல். போட்டியில் ‘மன் கட்’ முறையில் எந்த பேட்ஸ் மேனை ரன் அவுட் செய்வீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு அஸ்வின் கூறும்போது, எந்த பேட்ஸ்மேனாவது நான் பந்து வீசும் போது கிரீசை விட்டு வெளியேறினால் ‘மன் கட்’ முறையில் ரன் அவுட் செய்வேன் என்று பதில் அளித்தார்.

முகநூலில் நாம்